வரம்
இறைவா - நீ
இரக்கம் இல்லாதவனா - என்
இன்னலைத் தீர்க்கத் தெரியாதவனா
விளக்கை ஏற்றிவைத்தாய்
நான் வாழ்வதற்கு - அது
அணையலாமோ தாழ்வதற்கு
இரக்கம் இல்லாதவன் மனிதனா?
மனிதனைப் படைத்ததால் - நீ
இரக்கம் இல்லாதவனா?
பிறக்கும் போதே எழுதிவிட்டாய்
தலைவிதியை - நான் வளரும்போதே
காட்டிவிட்டாய் நின் மதியை
என்றாலும் தேடவைத்தாய் நிம்மதியை
சூடம் ஏற்றி கேட்பதில்லை வரத்தை
சூழ்நிலை அறிந்து மாற்றிக்கொள்வதில்லை
என் தரத்தை - மனிதனாய் வாழ
வரமளித்தாய் - மனிதனாய் மாளவும்
வரமளிப்பாய் - தான் என்ற எண்ணம்
தோன்றவேண்டாம் - அது
தலையெடுக்கவும் வேண்டாம் - எனக்குத்
தேவை இந்த வரமே - தந்திடுவாய்
இறைவா இந்த தருணமே