மரணம் நேரும் நிமிடம்.....

மரணம் நேரும் நிமிடம் பற்றி...
கவிதை கேட்டான் என் நண்பன்.....
ஒரு கணம் மரித்து போனான் என் கவிஞன்...
மறுகணம் விழித்து எழுந்தான்
இக்கவிதையோடு.....

மரணம் நேரும் நிமிடம்....
எப்படி இருப்பேன் நான்....?


உடல் துணுக்குகள் எல்லாம்
மரித்து போக சொல்லியும் ....
மரிக்க மனமின்றி கிடப்பேனா?

காலன் வரும் நொடியும் .....
காலால் உதைத்து விட...
கட்டியம் கட்டிக் கிடப்பேனா?

கைகள் தொழுதபடி....
விழிகள் அழுதபடி
பயத்தோடு மரிப்பேனா?

எப்படி இருக்கும் ?
என் மரண நிமிடம் என....
குழம்பியபடி இருக்க......

வந்தான் ....என்
வழித்துணையாய்....
வள்ளுவன்....
அவன் வைர வரிகளோடு....

"உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு"

எழுதியவர் : (20-Jun-13, 12:45 pm)
சேர்த்தது : krishnamurthy
பார்வை : 109

மேலே