டீக்கடை….. என்.எல்.சி. பங்கு விற்பனை
இந்த என்.எல்.சி, பங்கு விற்பனை இப்பதிக்கு தமிழ்நாடு பூரா… டாக் ஆஃப் த டாபிக் ஆக இருந்துக்கிட்டு வருது.. அத பத்தி கொஞ்சொ பாக்கலாமா….
என்.எல்.சி அப்படீங்கிறது நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் அப்படீங்கரதோட சுருக்கம். அதாவது பழுப்பு நிலக்கரி சுரங்கம் வெச்சிருக்குர அரசாங்க கம்பெனி. இந்த நிலக்கரி மூலமா நெய்வேலியில மின்சாரம் தயாரிக்க இந்த மத்திய அரசு தன்னோட முதலீட்டுல 1956ல ஏற்படுத்திய நிறுவனம் இது. இதுல 93.56% பங்கு மத்திய அரசு கையிலயும் மீதிப் பங்குல பெரிய அளவு எல்.ஐ.சி. கையிலயும் அப்புரொன் இது போல பல பேருக்கிட்ட இருக்குது. இப்ப செபி அப்படீன்னு ஒரு புதுசா ஒரு மாஸ்டர் வந்திருக்காருல அதாங்க இந்த பங்கு சந்தைகள எல்லா கட்டுப்ப்டுத்துரவுக… அவுக சொல்லிப்புட்டகளாமில்ல, மத்திய அரசோட நவரத்தினா கம்பெனிகள்ல 10% மத்திய அரசை தவிர்த்து அடுத்தவுக எல்லார்கிட்டயும் இருக்கனுமின்னு சொல்லிப்புட்டாகளான். அதுனல இந்த இந்த மத்திய மந்திரி குழுவோட அனுமதி வாங்கி, அதுல ஏற்கனவே இருந்த 6.44% போக, இன்னும் ஒரு 5% பங்குகளை வித்து காசாக்கலாமின்னு களத்துல இறங்கியிருக்கு இந்த மத்திய அரசாங்கொம்.
அதுல யாருக்கும் எந்தவொரு பாதிப்பும் இருக்கபோரது இல்லை. இந்த தொழிற்சங்கக் காரவுகளுக்கு சும்மாக்காச்சிக்கும் மனசுல பயம் வராப்ல ஒரு பூச்சாண்டி காட்டி போராட்டம் பண்ணனுமின்னு இறங்கி அது வர்ர தேர்தலுக்கு அடித்தளமா ஆகி, இப்ப முழுக்க அரசியலாகிக்கிட்டு இருக்கு. ஆமாங்க…. மத்திய அரசு தன்னோட பங்கு இருப்பில இருந்து 5% பப்ளிக்கு குடுக்க போராகளாம். யாரு வேணுமின்னாலும் வாங்கலாமில்ல. இப்பிடி கைய புடிச்சு நிறுத்துரவுக, எல்லார்கிட்டயும் காசு சேத்து அந்த பங்குகளை வாங்கலாமில்ல. இன்னிக்கு தேதிக்கு 58 ரூபாய்தானே அதோட ஒரு பங்கு விலை. ஏன் இந்த ஆர்ப்பாட்டம் செய்யணும்?
சும்மா ஒரு பரபரப்பை ஏற்படுத்தணுமின்னே ஒரு வாடிக்கையா வெச்சிக்கிட்டு, இந்த டிவி சேனல்களையும் உசுப்பேத்தி விட்டு, நெதமும் ஒரு அறிக்கை விட்டுக்கிட்டு, போராட்டம். ஆர்ப்பாட்டம், வேலை நிறுத்தம்னுகிட்டு பொழுதை ஒப்பேத்திக்கிட்டு இருக்காக.. தேவையே இல்லாத விஷயம் இதெல்லாம்….. அதை விக்கிறதால யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் இருக்க போறதில்லை. இவுக சொன்னாலும் இந்த மத்திய அரசு கேக்கப்போரது இல்ல….
இருந்தாலும் இதயே ஒரு பொழப்பா வெச்சிக்கிட்டு இப்பிடி ஆர்ப்பாட்டம் செய்யிரவுகள, அறிக்கை விட்ரவுகள என்னன்னு சொல்ரது…?
உங்க பாமரன்.