மீண்டும் பூக்குமா அந்தப்புது மலர்?
அவள் காதலித்தால்
நீயும் காதலி.
அதுதானே காதல்.
உன்னைத்தான் அவள்
காதலிக்க வேண்டுமா?
உனக்காகத்தான் அவள்
பிறந்தாள் என்று
எவனடா சொன்ன்னான்?
உனக்கென்று எவள்
பிறந்திருக்கிறாளோ
அவளைப் பொறுமையாகத் தேடு1
அதைவிடுத்து யாருக்காகவோ
பூத்த மலரை
அமிலத்தால் பொசுக்கி
விட்டாயடா பாவி!
உனக்குக் கிடைக்காதது
வேறு எவருக்குமே
கிடைக்கக்கூடாதா?
கட்டாயப் படுத்தினால்
அது காதலில்லை.
அதற்கு பெயர்
பாலியல் பலாத்காரம்!
அட சண்டாளா!
இப்போது உன்மீது
எத்தனை குற்றங்கள்!.
உனக்கு ஆயுளோ!
தூக்கோ!எதுவானாலும்
அந்தப்புது மலர்
மீண்டும் பூக்குமாடா
கொலை காரா?
கொ.பெ.பி.அய்யா.
.