வனம் காப்போம் ... வளம் பெருக ....

அத்தியாவசியத்திற்கு
ஆயிரம் வழிகள் உண்டு ...
என் நாடு அழிய
நான் காரனமாகிறேனே
என்னை அழித்தால் - என்
நாடு வளம் பெரும் என்றால்
நானே தலை வணங்குவேனே
உன் வாளுக்கு !
என் இனம் அழிந்தால் - உன்
வளமும் அழிந்து போகுமே என் நாடே !
அரசியல் விளையாட்டில்
மக்களின் வசதிக்காக எனும் பெயரில்
என் இனத்தை அழித்து - உன்
வளத்தை கெடுக்கிறார்களே என் நாடே !
எதிர்கால சந்ததிகளின் வாழ்க்கை
வளமாய் வாழ வழியில்லாமல் போகுமே
எதிர்த்து கேட்கும் திறன் இருந்தால்
நாட்டின் செல்வதை அழிக்கும்
--- வாதிகளை நானே அழிப்பேன்...
எதிர்க்க சக்திக்கொண்ட மக்களும்
என்னைப்போலவே இருக்கிறார்களே !
இயற்கை வளம் அழித்து
செயற்கை வாழ்க்கை வாழாதே
நீங்கள் செல்வ செழிப்பாய் வாழ
எங்களை வாழவிடுங்கள் - உங்கள்
வளம் பெருக ! ...

வனம் காப்போம் - நாட்டின்
வளம் பெருக ...


இப்படிக்கு
மரம் (எ) இயற்க்கை வளம் .
நன்றி ...

எழுதியவர் : சுரேஷ் . G (24-Jun-13, 9:53 pm)
சேர்த்தது : sures
பார்வை : 1984

சிறந்த கவிதைகள்

மேலே