தமிழகத்தில் காவிரி ஆறு கழிவு நீர் ஆறாக மாறிவிட்டது...?

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் காண மழை காரணமாக கபினி ஆணை நிரம்பிய நிலையில், அதில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து 25,000 கன அடி தண்ணீர் மேலும் உயரும் யெனெற்று தெரிகிறது. கிருஷ்ணா சாகர் மற்றும் கபினி அணைகளில் நீர் மட்டும் உயர்ந்து சில அடிகள் நீர் உயர்ந்தால் ஆணை முழுதும் நிரம்பிவிடும் என்ற நிலையில் கர்நாடக அரசு வேக வேகமாக தண்ணீரை திறந்து விட்டுள்ளது.

ஆக, மேட்டூர் அணையின் நீர் மட்டும் வேகமாக நிரம்பி விடும்..தமிழகத்தின் காவிரி ஆற்றின் வழியாக தண்ணீர் வரத் தொடங்கிவிடும்....காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் இனி விவசாயம் செய்யலாம்...ஆற்று மணல் கிடங்குகள் மூடப்படும்...அல்லது ஆற்றில் தண்ணீர் வந்தால் என்ன..? வராவிட்டால் என்ன ..? என்று கூறி தண்ணீரோடு ஆற்று மணல் குவாரி செயல்படத் துவங்கும்..!

சில நாட்களுக்கு முன்பு வரை கர்நாடக அரசு எங்களுக்கே தண்ணீர் இல்லை...
பெங்களூரு நகருக்கு குடிதண்ணீர் வழங்க முடியவில்லை என்று சொன்னது...
மலை பெய்த சில நாட்களிலேயே ஆணை நிரம்பி விட்டது என்றால் என்ன அர்த்தம்...படு பயங்கரமாக பொய் சொல்கிறார்கள் என்று தானே அர்த்தம்..!

ஆக, கிருஷ்ணா சாகர், கபினி மற்றும் ஏனைய அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதை எதிர்ப்போம்...எங்களுக்கு கழிவு நீர் அதாவது உபரி நீர் வேண்டாம்...காவிரி நீர் பெறும் உரிமை வேண்டும் என்று கூறுகிறார்கள் தஞ்சை விவசாயிகள்...!

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (26-Jun-13, 2:40 pm)
பார்வை : 125

மேலே