காதலியே நீயென்றால்.....................

காதலியே  நீயென்றால்.....................

உன்னை காணாத
நாளன்று
காய்ச்சலில் விழுகின்றேன்!!

உன்னை தேடாத
இரவெல்லாம்
விடியாமல் விழிக்கின்றேன்!!

நீ மழையாக
வந்தாலோ
தரையாகி போகின்றேன்!!

நீ நிழலாக
இருந்தாலோ
இளைப்பாரி விடுகின்றேன்!!

நீ பூவாக
மலர்ந்தாலோ
தேனெடுக்க அமர்கின்றேன்!!

நீ புத்தகமாய்
பிறந்தாலோ
புரியாமலேயே படிக்கின்றேன்!!

நீ கனவாக
வந்தாலோ
காலைமுடிந்தும் உறங்குகின்றேன்!!
=========================

எழுதியவர் : பாசகுமார் (28-Jun-13, 3:50 pm)
சேர்த்தது : சடையன் பெயரன்
பார்வை : 114

மேலே