குழந்தைகள் இல்லா உலகம்

குழந்தைகள் இல்லாத உலகில்
பூக்கள் மலர்வதில்லை ;

குழந்தைகள் இல்லாத தேசத்தில்
நட்சத்திரங்கள் மின்னுவதில்லை ;

குழந்தைகள் இல்லாத ஊர்களில்
புல்லாங்குழல்கள் இசைப்பதில்லை ;

குழந்தைகள் இல்லாத தெருக்களில்
தென்றல் நுழைவதில்லை ;

குழந்தைகள் இல்லாத வீடுகளில்
அழைப்பு மணிகள் அடிக்கப்படுவதில்லை !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (29-Jun-13, 4:50 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 227

மேலே