மகிழ்ச்சி
மலரின் மகிழ்ச்சி - அதன்
மணத்தில் தெரியும் .
மண்ணின் மகிழ்ச்சி - அதன்
விண்ணின் மழைத் துளி
மதுவின் மகிழ்ச்சி - அதனை
உறுஞ்சும் வண்டுகள் ;
குழந்தையின் மகிழ்ச்சி -அதன்
குதூகல விளையாட்டு .
பள்ளிச் சிறார்களின் மகிழ்ச்சி -அவன்
பெறும் பரிசுகள் .
மரங்களின் மகிழ்ச்சி - அதில்
மலரும் மலர்கள் .
கடலுக்கு மகிழ்ச்சி - அதன்
மோதும் அலைகள் .
கார்முகிலின் மகிழ்ச்சி -அதன்
காதல் மேகங்கள் .
இயற்க்கைக்கு மகிழ்ச்சி -இவை
அனைத்தின் மகிழ்ச்சி !!!!!