கனவான கணவன்

கணவனாய் வந்து கனவாகிப் போனாயே
கனவென்று தெரிந்தும் உன் கை சேர எண்ணினேன்
விழிமூட மறுத்தாலும் உன் நினைவோடு நித்திரை
உன் முகம் காண துடிக்கிறேன் உன் மனது உணராதா !

நீயின்றி நானில்லை என்றிருந்தோம்
நானின்றி நீ வாழ தெளிந்தாயோ !

பிரிவென்ற பெருந்துறவை தந்துவிட்டு சென்றாலும்
நம் அறம் காத்து நல்லறம் காத்து வாழ்வேன்
நீயில்லை என்றாலும் நம் உறவின் வித்தை வாழவைப்பேன்
நானாக நீயிருக்க மறுத்தாலும் நீயாக நீயிருக்க மறுத்தாலும்
நீயாக நானிருப்பேன் என் மூச்சோடு உள்ளவரை !

எழுதியவர் : (30-Jun-13, 10:11 pm)
சேர்த்தது : sakthy
பார்வை : 79

மேலே