சூதாட்டம் வேண்டாம் போராட்டம் தேவை
பிழைப்பு அற்றவர்களின்
பொழுதுபோக்கு விளையாட்டு
பணம் முதல் தொடங்கி
மானம் கூட இங்கு அடமானமாய் ............
ஓர்நாள் ஜெயிப்பான் ஓர்நாள் தோற்ப்பான்
வெற்றியும் தோல்வியும் நிரந்தரமில்லை
வெற்றி களிப்பில் இன்பமும் உண்டு
தோல்வி இழப்பில் சண்டையுமுண்டு ..........
தருமன் தோற்றான் பாண்டவர் கதையில்
சரித்திர அசிங்கமும் நடந்தது சபையில்
இன்னும் திருந்தல உலகம் இன்றும்
எல்லாம் நடந்தும் சூதாட்டம் தொடருது ...........
மதுவிற்கு அடுத்த சமூகக்கேடு
குடும்பங்கள் அழிய இது ஒரு கேடு
பொருளை அழித்தான் புகழை அழித்தான்
இறுதியில் தானே மாய்ந்தான் சூதாட்ட இழப்பால்
இன்றைய வாழ்வில் இயல்பாய் போனது
இந்திய பொருளாதாரம் வீணாய் ஆனது
எத்தனையோ குடும்பம் தெருவுக்கு போனது
இந்திய சட்டம் என்னையா செய்யுது ..............
வீட்டில் தொடங்கி வீதி வரைக்கும்
வீட்டு விசேஷங்களிலும் இதுவே நடக்கும்
விளையாட்டு போட்டியிலும் மறைவாய் தொடரும்
இந்த விந்தையான விபரீத சூதாட்டம் ...........
வீட்டு பொருளாதாரத்தோடு
நாட்டு பொருளாதாரமும்
நடுத்தெருவுக்கு போகுது
எல்லாம் கருப்பு பணமாய் மாறுது ..............
படித்தவன் செய்யும் பகட்டு வேளையிது
பணம் படைத்தவன் செய்யும் திருட்டு வேளையிது
ஏழைகுடும்பமே வீணாய் போகுது
எவரும் திருந்தல என்ன செய்வது ...........
நாடும் வீடும் நலம்பல பெற்றிட
எண்ணத்தை கொஞ்சம் மாற்றி பார்ப்போம்
உழைத்து சேர்க்கும் உந்தன் பணத்தில்
ஒருவேலை சோராகினும் உரிமையாய் உன்னு ....
ஏமாற்றி சேர்க்கும் பணமும் நிற்காது
சோம்பேறி வாழ்க்கை வெற்றியை கொடுக்காது
உழைத்து வாழ்வதனாலே உயர்வை பெறுவாய்
உண்மை அதனை இன்றே உணரு ............
சூதாட்டம் வேண்டாம் வாழ்வில்
போராட்டம்தேவை நம்மில்
போராடி வெல்வோம் வாழ்வை
சோம்பலை கொல்வோம் நாமும் ..........