தீராத தீவிரவாதம்

ஏதேனும் பாதுகாப்பை நிச்சயித்து கொள்ளும்
கண்களில் எல்லாம் அர்த்தங்கள் அடுக்கபடுகின்றன
சிலது சில மாதிரி என்று
சொல்லுவதற்கும் செய்வதற்கும் ஏதேனும்
வேண்டுமென்றுதான் ஆரம்பிக்கிறது
ஆளை கொல்லும் ஆட்டம்
இரும்பு கம்பிகளாக ஆகி போகின்றன பகைமை
அணுகுண்டு அணுக்களில் அடுக்கபடுகின்றன
வெடித்து சிதறும் சடலங்கள்
உறைந்து கிடக்கும் குருதியில்
இறைந்து கிடக்கும் ஈக்கள்தான்
எப்பொழுதும் (தணியும் )தீவிரவாதம்???

எழுதியவர் : த. நந்தகோபால் (4-Jul-13, 6:44 pm)
சேர்த்தது : nandagopal d
பார்வை : 82

மேலே