கருவுற்ற நாளில் இருந்தே வயதை கணக்கிட்ட காதலனுடைய காதல் திருமணம்
ஒரு ஊரில் இரு காதலர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, வீட்டை விட்டு வெளியேறி விட்டனர். திருமணமும் செய்து கொண்டனர் பிறகு சட்டப்படி இத்திருமணம் செல்லாது என பெண் வீட்டார், காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஏன் என்றால், பெற்றோர்கள் வாதப்படி பெண்ணுக்கு தற்போது வயது பதினேழு வருடம் நான்கு மாதம் மட்டுமே முடிந்துள்ளது அது தான் உண்மை, ஆனால் காதலனின் வாதப்படி, அவள் பிறந்த பிறகு இன்று வரை கணக்கிட்டால் நீங்கள் சொல்வது கணக்கு சரி ஆனால் என்னுடைய கூற்று படி அவள் கருவுற்று பத்து மாதம் கழிந்த பிறகே பிறந்துள்ளத்தால், கருவுற்ற நாளில் இருந்தே கணக்கிட்டால் அவளுக்கு பதினெட்டு முடிந்து இரண்டு மாதம் கழிந்து விட்டது என்று வாதிட்டான்,அவனின் இந்த திறமையான வாதத்தை காவலர்கள் வியப்பாக பார்த்தார்கள். ஆனால் ஹிந்து மத சட்டப்படி அவன் வாதம் ஏற்று கொள்ளும் விதமாக இல்லை.இதற்கு உங்களுடைய கருத்து என்ன?