நான் ஒரு (Software Engineer) மென்பொருள் பொறியாளர்

தினமும் ஒன்பது மணிக்கு தொடங்கும்
கணிப்பொறியுடனான யுத்தம்

மதியத்துக்குள் தவறு(Error ,bug ),மாற்றம்(changes) என்று
எதிரிகள் பலரை வீழ்த்துவது என் பணி..

வீழ்ந்தது எதிரிகள் அல்ல நான்
வீழ்ந்த வேகத்தில் காஃபி(coffee) குடிக்க போனேன்...

குடிப்பதற்குள் வந்துவிடும் இமெயில்(next task)
அடுத்த யுத்தத்துக்கு தயாராக சொல்லி ..

கூகுளிடம்(Google) குமுறுவேன்
யாஹூவிடம் (Yahoo) சண்டையிடுவேன்..

உணவு இடைவேளைக்குள்
உயிர் பாதி போய் விடும்...

உயிர் போகும் போராட்டத்தில்
இடியாக விழும் காதலியின் அழைப்பு(phone call)

பாதி வேலை முடிவதற்குள் மனம் சிட்டாக
பறக்கும் முகநூல்(fb status) பார்க்க...

காதலியின் துப்பட்டா போல மனதை வருடி போகும்
சில முடியபோகும்(completed task ) வேலைகள்..

சாப்பிடவும் சிந்திக்கவும் முடியாமல்
சோதனையாகவே முடியும் உணவு இடைவேளை..

குழு சந்திப்பு (Team meeting) எல்லாம்
சிறைவாசம் போல இருந்தது...

கலந்துரையாடல்(Discussion) எல்லாம்
தொந்தரவாய்(Disturbance) இருந்தது...

பகலும் இரவும் ஒன்றானது கணினியை
பார்க்க முடியாமல் கண்கள் அழுதன...

கணினிக்கு மின்சாரமானது (power ) கண்ணொளி
கண்னுக்கு கண்ணாடி (power glass ) போட்டேன் ..

கில்லி விளையாடிய விரல்கள்
விசைபலகையிடம் சிக்கிகொண்டன..

மாலை ஆறு மணியானதும்
மங்கிய கண்கள் மலராக பூத்தது..

மனம் ஏங்குகிறது வெள்ளி கிழமைக்காக
கோவிலுக்கு போக அல்ல,கடைசி நாள் என்பதினால்..

தினம் மென்பொருள் குறியீட்டில் (program) ctrl+z (undo) செய்கிறேன்
என்வாழ்வில் கிடையாது ctrl+z (undo)..

நான் ஒரு மென்பொருள் பொறியாளர் ( Software Engineer)

எழுதியவர் : தவமணி (6-Jul-13, 12:49 pm)
பார்வை : 721

மேலே