என்ன செய்தாய் ?

இவ்வளவு செய்த
உன் அம்மாவுக்கு
நீ என்ன செய்தாய்?
- மனசாட்சி கேட்டது .....
பெரிதாக எதுவும்
செய்ததாக நினைவில்லை...
கடைசியாக இடுகாட்டில்
குழியில் வைத்து
காதில் கழுத்தில் மூக்கில்
கையில் இருந்தவைகளை
கழற்றிக் கொண்டுவிட்டு
மூன்றே மூன்று பிடி
மண்ணைத்தான் அள்ளிப்போட்டேன் !

எழுதியவர் : வெ. நாதமணி (8-Jul-13, 9:13 pm)
பார்வை : 67

மேலே