தாய்ப்பால்
நீயென்னை பட்ட பெயர்
சொல்லி அழைத்தாலும் இனிக்குது
கெட்ட வார்த்தை சொல்லி
திட்டினாலும் இனிக்குது
உன்னோடு
நாள் முழுவதும் சுற்றினாலும்
என் வயிறு பசியென்பதை
மறக்குது..
இந்த சந்தோசம் இன்னும்
கிடைக்குமா என்றல்லவா
என் மனம் ஏங்குது
ரகசியங்கள் நமக்குள்
இல்லை..
இடையிலே ஊர்வசிகள்
வந்தால் சிறிய தொல்லை
இருந்தாலும் நம் நட்பில்
எப்பொழுதும் விரிசல்
இல்லை..
பூ தந்தாள் மனைவி
புன்னகை சிந்துவாள்
பலகாரம் தந்தால் மகளோ
பல்லு காட்டி சிரிப்பாள்
ஆனால்..
நீ மட்டும் அல்லவோ
என் வேதனைக்குள்ள
தாய்ப்பால்..!