'''கர்ம வீரர் காமராஜரின் மந்திரங்கள்'''

படிக்காத பாமர மக்களின் பரம்பரை
பட்டம் பெற பாதை அமைத்ததால்,
படிக்காத மேதை தான் அவர்...!
ஏழை மக்களின் ஏக்கத்தினை
உணர்ந்து ஊக்கம் தந்ததால்
ஏழைகளின் காவலன் தான் அவர்...!
உள்ளத்தில் கருணை பொங்க தமிழின்
இன்ப வெள்ளமாய் அவர் தந்த
சிந்தனைகளே தமிழர் நம் வாழ்வின்
மந்திரங்கள்...!
நாட்டினை ஆளக் கற்றுக் கொண்டவன்
அரசன் அல்ல மக்களை ஒன்றிலிருந்து
காக்க கற்றுக்கொன்டவனே அரசன், என
அரசர்களை நாட்டிற்கு வழங்கியதால்
'கிங் மேக்கர் தான் அவர்...!
மனிதனுக்கு வயது நூறு என வரையருத்தானாம்
நம் தேவன், ஆனால் அவரையும் எய்த்து
இன்றும் நம்மில் வாழ்ந்து ஆட்சி புரியும்,
தன்னுடைய அம்மாவால் பிரியமாக
'காமாட்சி' என அழைக்கபட்ட நம்
''கர்ம வீரர் காமராஜர்''' தான் அவர்.....!!!

எழுதியவர் : புஞ்சை கவி (14-Jul-13, 10:10 pm)
பார்வை : 278

மேலே