+நானிருக்கும் வரை உன் நினைவிருக்கும்!+
உனைப்பற்றிய கவிதையை
முதலில் நான்
காகிதத்தில் எழுதினேன்...
காகிதம் கிழிந்துவிட
கணினியில் எழுதினேன்...
கணினி அழித்துவிட
என் நினைவில் எழுதுகிறேன்...
நானிருக்கும் வரை
உன் நினைவிருக்கும்...
என் நினைவிருக்கும் வரை
உன் கவியிருக்கும்...