மரணம் நிச்சயம் .......?

நித்தம் நித்தம்
புது உயிர்
மண்ணை காண்கிறது
மண்ணில் இருக்கும் மறு உயிரோ
நித்தம் நித்தம்
மண்ணில் புதைகிறது

நாளைதான் மரணம் என்று
ஒவ்வொரு உயிரும் நினைக்கிறது
உடனே வரும் மரணம் கண்டு
ஏனோ மனமும் வெறுக்கிறது

இவ்வொலகு நிரந்தரமில்லை என்று
ஒவ்வொரு மனமும் ஏற்கிறது
நிரந்தமற்ற இவ்வொலகை சுவைக்க
மனம் ஏனோ தூண்டுகிறது

ஆண்டவன் தந்த ஆசி மறந்து
மனம் ஆட்டம் போடுகிறது
ஆட்டம் ஓட்டம் அடங்கிய பின்
மனம் ஏனோ ஆசிரமம் தேடுகிறது

ஆண்டவன்தான் துணை என்று
நினைக்கும் மனங்கள்
தினம் நிம்மதியை சுவைக்கிறது
மறுத்து வாழும் மனங்கள்
இன்னும் நிம்மதியை தேடுகிறது

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (18-Jul-13, 10:48 pm)
பார்வை : 204

மேலே