நீயிலா இடமது...
அம்மா
எங்கிருக்கிறாய் நீ...
கண்களில் பூசிய
சுருமாவுடன்
கடைசியாய்
நான் கண்ட உன் முகம்
காட்சிப்பதிவாய்
என் கண் முன்னே
வந்து வந்து போகிறதே...
நீயிலா என்
முதல் ரமலான்...
நீ தொட்டுக்கொடுக்கும்
புதுத்துணி...
நீ ஓடிக்கொடுக்கும்
ஜக்காத்...
எங்களுக்காய்
நீ கொடுக்கும்
வித்ரு காசு...
பேத்திகளுக்காய்
நீ கொடுக்கும்
பெருநாள் காசு...
தொழுது வரும்
பிள்ளைகளுக்காய்
முண்டியடித்து நீ எடுக்கும்
ஆரத்தி...
இனி இல்லை
இவை அனைத்தும்
எங்களுக்கு...
எங்கிருக்கிறாய்
அம்மா...
நலமுடன் இருப்பாய்
என்று நம்புகிறேன்...