விடியலை நோக்கி !!!
நேற்று என்பது
கிழிந்து போன காகிதம்
நாளை என்பது
வரப்போகும் செய்தித்தாள்
இன்று என்பது
உன் கையில் உள்ள ஏடு
அதில் நீ நிரப்பும்
ஒவ்வொரு வரிகளும் உனது
வாழ்வின்
முன்னேற்றத்திற்கான அச்சாணி
துன்பம் என்பது நிரந்தரம் அல்ல
இன்று
உன் உயிர் உன்னோடு
நாளை ???
சிந்தித்து பார்
உனக்கென வாழ்வது நீ மட்டுமே
உன் முயற்சி தான்
உன் வெற்றிக்கான
ஆயுதம் ...
நீ சந்திக்க போகும்
உன் உலகம் தான்
அதற்கான போர்களம்
எழுந்துவா மானிடா
நாளைய சரித்திரம் உன் கையில் !!!!