குடை கொண்ட கரு மழை

உணவு தூக்கிப்
போகும்
எறும்பின் கண்களில்
நம்பிக்கை....
கனவு தூக்கிப்
போகும்
தூக்கத்தின் பிடியில்
விடியல்....

மரம் என்பது மனிதம்
மனிதம் என்பதில்
அறம் தேடு....
புனிதம் என்பது மரம்
மரம் என்பதில்
நிஜம் பாரு....

வரை....
வரைந்ததில் சிறை...
அகப்பட்ட வெற்றிடம்....

திரை....
கிழிந்ததில் பிறை..
திறக்கப்பட்ட ஜன்னல்....

கசிகிறது குருதி
புசிக்கிறது கோபம்
யாசிக்கும் கைகளில்
உலகப் பந்தின் காற்று....

தீர்வு தேடியதில்
தேகம் சிரிக்கும்
தீர்வானவளின்
தீண்டல் புதிர்க்கும்.....

உடல் விரித்தது குடை....
கறுப்பாய் பூக்கிறது
தொடர் மழை.....

எழுதியவர் : கவிஜி (22-Jul-13, 11:57 am)
பார்வை : 91

மேலே