+நிலவா? நீயா?+
உன்னை நான்
நிலவு என சொன்ன அன்றே
நீ களவு போனாய்
என்னிடமிருந்து...
என்னை
காத்திருக்க சொல்லிவிட்டு
எங்கோ உலவு போனாய்...
கதைக்க வருவாய்
என நான் காத்திருக்க
நீயோ உன் அப்பனோடு
என்னை உதைக்க வந்தாய்!
உன்னை
நிலவென்னு
நான் சொன்னதில்
இல்லை குற்றம்!
நீ ஒரு
பௌர்ணமி நிலவென்று
நினைத்திருந்தேன்!
நீயோ உன்னே
அமாவாசை நிலவென்று
எனக்கு உணர்த்திவிட்டாய்!