நீயே நீயே!..
குளியலின்போது
தண்ணீர் திவளையாக
உயிருக்குள் நீ வழிகின்றாய்..
~@~@~@~@~@~@~@~@~@~@~
சாப்பிடும்போது
உணவின் சுவையாக
உடலுக்குள் நீ கலக்கின்றாய்..
~@~@~@~@~@~@~@~@~@~@~
தூங்கும்போது
கனவின் நினைவாக
மனதிற்குள் நீ வருகின்றாய்..
~@~@~@~@~@~@~@~@~@~@~
வணங்கும்போது
என்னுள் தெய்வமாக
இதயத்திற்குள் நீயே இருக்கின்றாய்..