உன்னோடு என் நட்பு!

என் வெற்றிகளை
யார்யாரிடமோ சொல்லி மகிழ்ந்தாலும்
உன்னிடம் சொல்லும்போது மட்டுமே
உற்சாகம் துள்ளும்..
என் துன்பங்களில்
எத்தனைபேரோ வந்து ஆறுதல்கூறினாலும்
உனது சொற்கலில் மட்டுமே
என்மனது ஆறும்..

தோல்விகளில் தோள்கொடுக்க
நீயிருக்கும்போது
தோல்விகள் தழுவுமென்ற பயமில்லை
அன்பின் தூணாக
நீயிருக்கும்போது
வாழ்க்கை வலிகளுக்கு அச்சமில்லை!

என் வாழ்வின் வளமும் நீதான்
என் வாழ்வின் வசந்தமும் நீதான்
என் வாழ்வின் உச்சமும் உன்னால்தான்
என் வாழ்வின் சொச்சமும் உன்னோடுதான்!

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (4-Aug-13, 11:22 pm)
பார்வை : 501

மேலே