என்னதான் நடக்கிறது?

என்ன அங்கே நடக்கிறது
எனக்கு ஒன்னும் புரியல
சின்ன வீடு பிரச்சனையோ !
சீரழியுது குடும்பங்கள்!

பத்தினியும் கொலை செய்வாள்
பழ மொழியும் உண்டென்பார்.
நித்தம் நித்தம் கணவன்களை
பத்தினிகள் கொல்கின்றனர் !

குடிகாரன் என்பதால் அவள்
கொன்றாள் எனச் செய்திகள்
விடிந்து எழும் போதெல்லாம்
படிப்பதிந்த கொடுமைகள் ! .

பெற்றெடுத்த குழந்தைகளை
குத்திக்கொலை செய்கிறான் .
இத்தனைக்கும் காரணம்
அத்தலையும் மனசுதானோ!

தற்கொலைகள் தினம் தினம்
தவறாமல் செய்திகள்
விற்பனை விபச்சாரங்கள்
வேதனையோ வேதனை!

அடுத்த மனை ஏங்கலும்
கெடுக்கும் குடி நோங்கலும்
அறம்பிறழ்ந்த வாழ்க்கையும்
அவை எமன் காலன் தூதனோ!

அரமேஸ்

எழுதியவர் : அரமேஷ் (10-Aug-13, 1:26 pm)
பார்வை : 82

மேலே