நான் ஒரு வாழாவெட்டி..!

கணவனை கை கழுவி
====== பிறந்த வீடு வந்தாச்சு
கன்னத்தில் அடித்த காட்டு
====== மிருகத்தை விட்டாச்சு
தப்பித்தாள் என சொல்லி
====== தாய் தந்தை பேச்சாச்சு
தினம்முழுக்க தின்ன பயம்
====== மன கஷ்டமும் தீந்தாச்சு
தங்கை வந்து தலைமாட்டில்
====== அன்பை கொட்டி தந்தாச்சு
அப்பப்பா நிம்மதின்னு
====== அப்படியே இருந்தாச்சு..!
காலங்கள் கரைந்தடி பல
====== காட்சிகளும் மாறியதே
கோலங்கள் அது வரைந்து
====== கோர தாண்டவம் ஆடியதே
சமைப்பதும் துவைப்பதும் தின
====== சட்டங்கள் ஆனதடி
சாபபெண் நானென்று எனை
====== சகலபேரும் சொல்லுதடி
அண்ணியின் குரலுக்கு நான்
====== அடுத்து வந்து நிக்கணும்
அவள் ரண்டு குழந்தைக்கும்
====== ஆயாவா தினம் செல்லணும்
அடுத்த வீட்டு மாமிகளின்
====== வசை மாரி கேட்கணும்
அடுத்த ஒரு மணவாளன்
====== ஆசையிலே இருக்கணும்..!
அன்னைக்கும் அடி மனசு
======அனலாவுது தன்னாலே
தங்கைக்கு தாரம் வர
====== தள்ளி போச்சாம் என்னாலே
மதி கெட்டு வந்தேனாம்
====== அப்பாவும் சொன்னாரே
அத்தனையும் அணைத்துவிட்டு
====== அடுப்படியில் தூங்குகிறேன்
கணவன் அடித்த கன்னத்தில்
====== வடுவொன்றும் இல்லையடி
சுடுகல் எறிய இதயத்தில்
======சொல்யிடி வந்து தாக்குதடி
இனி என்சொல்லி என்னபலன்
====== வாழ்வு இப்படி முடியுமடி
இறப்பதும் இங்கு இருப்பதும்
====== இப்போ ஒருபோல ஆச்சுதடி
கணவனை நீ வெட்டாதே
====== அவன் சொல்லையும் தட்டாதே
அடக்கத்தால் வாழ்வு கொடு
====== அன்பாலே விட்டு கொடு
ஆத்திரத்தில் மதி தட்டியதால்
====== என் வாழ்கையை வெட்டி
கண்ணீரில் மிதக்கின்றேன்
======நான் ஒரு வாழாவெட்டி..!