சிந்திக்(கலாம்) சாதிக்(கலாம்)

அழகிய கிராமத்தில் பிறந்து
ஆகாயத்தை பிளக்கும் புகழுடைய
இளைஞர்களின் கனவு நாயகனாய்
ஈடில்லா புகழுடைய தமிழனே
உலகம் சுற்றிய வாலிபனாய்
ஊடகங்களில் என்றும் நாயகனாய்
எட்டாக் கனியாய் பலருக்கும்
ஏவுகணை பல விண்ணுக்கு ஏவி
ஐம்புலன்களையும் அடக்கி ஆள்பவரே
ஒரு நாடும் கொள்ளாத பெருமையை
ஓங்கிய புகழ் உடைய
ஔவை மொழி கற்ற
இந்தியாவின் விண்மீனாய்
மாற்றாரின் சிம்மசொப்பனமாய்
பாரதத்தின் ஜனாதிபதியாய்
உன் புகழை எட்டவும்
நீ செய்த சாதனையை
ஈடு செய்ய இன்றைய
இளைஞராகிய எங்களால்
சிந்தித்து சாதிக்க முடியுமோ!

எழுதியவர் : கவின் பிரியதர்ஷினி (12-Aug-13, 7:51 pm)
பார்வை : 81

மேலே