பலரின் சிரிப்பு

""போன் பண்ணியிருந்தா... நான் உங்க வீட்டுக்கு வந்து
ட்ரீட்மென்ட் கொடுத்திருப்பேனே?''
""நீங்க வந்திருப்பீங்க... நர்ஸ் வந்திருப்பாங்களா?''
-
-------------------------------------------
-
"நினைத்தவுடன் உங்களால எப்படி கண்ணீர் சிந்தி
நடிக்க முடியுது?''
""அந்த மாதிரி நடிக்க வேண்டிய நேரத்துல என்னோட
கல்யாணத்தை நினைப்பேன். கண்ணீர்
பொத்துக்கிட்டு வந்துடும்''
-
வி.சகிதா முருகன்,
-
--------------------------------------------
-

""காலம் மாற வேண்டியதுதான்... அதுக்காக இப்படியா?''
""ஏன்?''
""எல்கேஜியில் சேர்க்கிறதுக்குக் கூட பேங்க் லோன்
தர்றாங்களாம்''
-
>பி.பாலாஜி கணேஷ்,
-
------------------------------------------------
-
""எங்க வீட்டுக்காரர் எப்பப் பார்த்தாலும் டிவியைப்
பார்த்துக்கிட்டு இருக்கார் டாக்டர்''
""இது ஒண்ணும் பெரிய பிரச்னை இல்லையே?''
""பவர் கட் ஆனா கூட மெழுகு வர்த்தியை கொளுத்தி
வச்சிக்கிட்டு டிவி முன்னால உக்காந்து இருக்கிறாரே''
-
>ஜோ.ஜெயக்குமார்,
-
--------------------------------------------
-
"அவரை ஏன் தலைவர் கட்சியிலிருந்து நீக்கிவிட்டார்?''
""நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழித்துக் கட்சியை
வளர்ப்போம் என்று பேசுவதற்குப் பதில்... நாங்கள்
ஆட்சிக்கு வந்தால் ஊழலை வளர்த்து கட்சியை
ஒழிப்போம் என்று பேசிவிட்டார்''
-
>அ.சுப்பையா
-

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (15-Aug-13, 5:23 pm)
பார்வை : 172

மேலே