பிரிவு மரணத்தின் மறுபெயர்

என் வசந்தமே!
அந்த ஓர் கணம்
என்
சூரியனில் ஒளி இல்லை
நிலவில் குளிர் இல்லை
காற்றினில் ஈரம் இல்லை
கடலில் நீர் இல்லை
விண்ணில் (விண்)மீன் இல்லை
மண்ணில் (என்)மான் இல்லை
பூமியில் எவரும் இல்லை
பூமி பூமியாய் இல்லை
பூமியில் மலை இல்லை
மலையில் மரம் இல்லை
மரங்களில் இலை இல்லை
இலைகளில் நிறம் இல்லை
நிறமான மலர் இல்லை
மலரில் மணம் இல்லை
மனத்திலே திடம் இல்லை
திடமான சொல் இல்லை
சொற்களில் உயிர் இல்லை
உயிரிலே சுவாசம் இல்லை
சுவாசமாக நீ இல்லை
உன்னிடத்தில் ஏனோ நான் இல்லை
நான் நானாக இல்லை
நான் சொல்லவும் இல்லை
(இப்போது)சொல்லிக்கொள்ள வழியும் இல்லை
(அப்போது)வழியிருந்தும் மனத்தில் நீ இல்லை
நீ இப்போது என்னவள் இல்லை
என்னவளாக இனி எவளும் இல்லை
எவளுக்கும் என் மனத்தில் இடம் இல்லை
என் மனம் என்னிடத்தில் இல்லை
என்னிடத்தில் குருதி இல்லை
என் குருதியில் ஆக்சிஜன் இல்லை
ஆக்சிஜன் அது என் உயிரில் இல்லை
மொத்தமாக,
நீ பிரிந்து சென்ற அந்த
ஓர் கணம் என்னிடத்தில்
என் உயிரே இல்லை
ஆம்,
என் மரணம்
என் முன்னே
என் கண்ணெதிரே
என் தலைமையிலே
அரங்கேறியது
என் பரிசுப் பொருளுடன்
‘பிரிவு மரணத்தின் மறுபெயர்’
-தமிழ்மணி