இந்திய ஆர்மிக்குசமர்ப்பணம்

அர்ப்பணிப்பின் அவதாரமாய்
என் தலைமுறையினர்
அதிகாரத்தின் அதிகாரமாய்
என் தளபதிகளை வைத்துக்கொண்டு

நம் நாட்டின் புன்சிரிப்பிர்காக
நாள்தோறும் போராடும் போராளி
பொற்காலமாய் இப்பூமி எங்கும்
பூஞ்சோலையாய் மலர்ந்திட
தினந்தோறும் அவா கொள்ளும்
திகில் காணும் தொழிலாளி

விஞ்ஞானமும் மெய்ஞானமும்
பொறுமையுடன் செயல்பட
பொறாமை இல்லாமல்
காக்கும் காவலாளி

கடவுள் உள்ளோர் என்றோர் ஒருபக்கம் இருக்க
அவர் இல்லவே இல்லை என்றோர் மறுபக்கம் இருக்க
இருவர் கண்களிலும் புலப்படாமல்
எஞ்சி இருந்து நாட்டை பேணும் ஒரு ஆர்வதாரி

உறங்க மடி தேடி
தாய்தந்தை நம் நாடென்று கருதி
உண்ண உணவை தேடி
பலபேரின் பட்டினியை நினைவில் கொண்டு

வள்ளல் சிலர் இருந்த போதும்
வறுமையால் வாடும் பலருக்காக
வேற்றுமை காணாமல் ஒற்றுமையாய் பிடித்து
வளர்பிறை எண்ணத்தை கெட்டியாய் பிடித்து

எவர் வந்தாலும்
என்றும் தோழ் குடுப்போம்
எங்கு சென்றாலும்
எதிலும் அர்ப்பணிப்போம்

லப்டப் என்று துடிக்கும்
மற்றவரின் நெஞ்சத்தின் மத்தியில்
இந்தியா என்று கர்ஜிக்கும்
மாற்றம் தேடும் தர்மம்

இந்திய ஆர்மிக்குசமர்ப்பணம்

எனது நான்
தியான்

எழுதியவர் : தியான் (20-Aug-13, 12:23 pm)
சேர்த்தது : enathunaan
பார்வை : 44

மேலே