மீண்டும் ஏமாற்றம்
கண்கள் மூடி கனவுகள் நான் கண்டேன்..
காலம் தந்த வலி மறந்து..
சுகமான நினைவுகளை சுகமாய் திரையிட்டது..
உள்ளம் மகிழ்ந்து உயிர் பெற்றேன் மீண்டும்
தோழி குரல் கேட்டு
கண் விழித்தேன்
கனவுகள் மறைந்தது..
காலம் விட்டு சென்ற காயங்கள் மட்டுமே
தெரிந்தது..
மீண்டும் ஏமாற்றம்..