குருடன்
வெகுதூரம் கடந்து வந்தேன்
காணாத உன்னை காண
என் கால்தடங்கள்கூட தவிக்குதடி
உன்னைக்காணாமல் என்
இதயமும் துடிக்குதடி
அறியா உன்னை காணவரும்
என் மனதிற்கு எப்படி வந்தது
இந்த மனநோய்
சீறிவரும் காளையும்
செய்வதறியாது திகைக்குதடி
வீசும் காற்றும்
சிறிது பின்வாங்குதடி
இதோ, என் கவிதை வரிகளும்
உன்னைப்பற்றி எழுத ஏங்குதடி
காலமும் பிழை செய்யும் நேரம்
இதுதான் காதலடி!!!!