காதல் ஒரு அழகிய வலி

போகும் பாதையில்
நிழலாய் உன்பிம்பம் தொடர்கிறது
அறிவாயோ நீ ..!

என் நினைவில் நிறைந்துள்ள
உன் நினைவுகள்
என்னை வாட்டுகிறது
அறியாயோ நீ ...?

என் கண்ணீரால்
என்னை ஆறுதல்படுத்திக்கொள்கிறேன்
அப்படி இருபினும்
என்னை ஆறுதல் படுத்த
உனது ஒரு சொல்லுக்காகவே
நான் வேண்டுகிறேன் இறைவா என ...!

உன்னருகில் இருக்கும் பாக்கியம்
எனக்கு கிடைக்குமேயானால்
என் உயிரையும் துச்சமென துறப்பேன்
அன்பே
உனக்காக ...!
என்றும் உன் நினைவுடன்
நான்
உனக்காக துடிக்கும் இதயத்துடன் ..........!

எழுதியவர் : தமிழ் இனியன் (22-Aug-13, 7:11 pm)
பார்வை : 261

மேலே