ஏமாற்றங்கள்

மரணிக்க நினைக்கும்
ஒவ்வொரு தடவையும்
ஒரு துளி நட்பாசையில்
உயிர் காத்தாய்..

எனக்கும் நீ இருந்து
என் நினைவுகளில்
துயில் கொண்டாய்

சிந்தனை கருவூலம்
சிதைத்து சிதைத்தே
உயிர் கொண்டாய்

சப்த நாளங்களுக்கு
தெரியாமலே
சிந்தைக்குள்
கவி பாடினாய்

விசச் செடியாய்
மரித்து
மயிரிலையில் உயிர் குடித்து
துளசி விருட்சமாய் மாறினாய்

துளசி செடியாய் இருந்து
உருமாறி-விசமாகி
உனக்கு நீயே
கொள்ளி வைத்துக் கொண்டாய்

ஒவ்வொரு நாளும்
பிறந்து
நீயே அழகு பார்தாய்

உன் நிறவாடைகள்
கலைக்கப் பட்ட போதெல்லாம்
உயிர் தீபம் அணைந்தது போல
மனக் குளத்தை
கண்ணீர் மழை கொண்டு
நிறைத்தாய்

உயிரற்ற ஒன்றுக்காய்
உன் உயிர் வதைத்தாய்

பசி மறந்தாய்
புசிப்பது துறந்தாய்

இருட்டறைக்குள்
இலவு காத்தாய்

உள் மனதிடம் சொல்
கொஞசம் உறங்கு

உன் மனக் குலத்தில்
கல்லெறிந்தவர்க்கு
நன்றி சொல்லட்டும்

ஏனனில்...
உன் கனவுக்கு
இதோ இன்னொரு
புது ஆடை தயாராகி்றது

சிந்தனை எனும் நெசவாலையில்..

எழுதியவர் : ஹபீலா ஜலீல் (24-Aug-13, 1:05 am)
Tanglish : aemaatrangal
பார்வை : 62

மேலே