என் உள்ளே

தந்தையின் காதல் கடல் தாண்டி
கண்ணீர் ஆனது ...
தாயின் காதல் தரை வழி தான்
பயணமானது ....
நண்பனின் காதல் பாதியிலே
அஸ்தமனமாக்கப்பட்டது
எத்தனை தவிப்பு
எல்லாமே துடிப்பு
இத்தனை தோல்விக்கும்
ஒரு முழம் தாடி வளர்த்திருந்தால்கூட
இன்று நான் உலக சாதனை
படைத்திருபபேன் ஆனால்
தாடி கூட போடி நீ
பெண் என்று கேலி செய்தது ...

இல்முன்னிஷா நிஷா

எழுதியவர் : இல்முன்னிஷா நிஷா (27-Aug-13, 9:19 pm)
Tanglish : en ulle
பார்வை : 59

மேலே