இடுகாடு

உன்னை கடந்து சென்றிருக்கிறேன்
பல முறை - ஏனோ
அறியேன் உன்னுள்
நான் அடக்கம்

வேடிக்கை பார்த்ததுண்டு
பலமுறை உன்னில்
உறங்க சென்றவர்களையும்
உன்னுள் உருகிபோனவர்களையும்

அந்த இடம் செல்லாதே
ஆவியடிக்கும் சொன்ன
அன்னையும் அடக்கம்
உன்னுள்ளே . . .

காற்றில்லாத உடல்
பிணம் எனும் பெயர் கொண்டு
உரமானது உனக்கு

வருபவரை எல்லாம்
உள்வாங்கி கொண்டே நீ
நீரம்பா உன் வயிற்றுக்குத்தான்
எத்தனை தீணி

இங்கு மரம் வைத்ததென்ன பலன்
சுவாசிக்க தான் யாரும் இல்லையே ?

ஊருக்கு எல்லை புறமாய்
நீ இருந்தும் உரே
அடக்கம் உன்னுள்ளே

அடக்கம் அமரருள் உய்க்குமாம்
ஆம் உன்னுள் அடக்கம்
ஆனால் தான் அவர்கள்
அமரர்கள் . . . .

உன்னை கடந்து சென்றிருக்கிறேன்
பல முறை - ஏனோ
அறியேன் உன்னுள்
நான் அடக்கம்!

எழுதியவர் : இனியாஇனியன் (27-Aug-13, 9:37 pm)
பார்வை : 118

மேலே