சின்ன சின்னதாய் ஆசைகள்!...
காலையில் கைவீசி பள்ளிசெல்லும்
மழலைகள் கண்டிட ஆசை!
மாலையில் ஓடிவிலையாடும் குழந்தைகள்
கண்டு மகிழ்ந்திட ஆசை!
அடித்துமிரட்டி பேசாத ஆசியரிடம்
மாணவர்கள் பயில்வதுகாண ஆசை!
அறிவாரய்ச்சிக் கூடமாய் பள்ளிகல்லூரிகள்
அற்புதமாய் நடப்பதுகாண ஆசை!
பிள்ளைகளை பணிக்கென பிரித்திடாத
பெற்றோர்களை கண்டிட ஆசை!
மூத்தோர்சொல் கேட்டு நடந்திடும்
இளைஞர்களை பார்த்திட ஆசை!
இலஞ்சம்ஊழலில் கலக்காத
அரசதிகாரியை தரிசிக்க ஆசை!
அடிதடி இரகளைகள் செய்யாத
அரசியல்வாதியை பார்க்க ஆசை!
சகதி நாற்றமற்ற நல்ல
வீதியில் நடந்திட ஆசை!
போக்குவரத்து நெரிசலற்ற
சாலையில் பயணித்திட ஆசை!
மின்சாரம் தடைபடாத ஊரில்
வளமாய் இருந்திட ஆசை!
சுகாதாரம் சிறந்த நகரில்
சுற்றித் திரிந்திட ஆசை!
இரசாயனம் கலக்காத நீரை
இன்பமாய் குடித்திட ஆசை!
சிந்து நதிநீரில் குமரியில்
சுகமாய் குளித்திட ஆசை!
உண்டு மகிழும் உழவனை
இரசித்து மனங்குளிர ஆசை!
துண்டு போர்த்திய உழைப்பாளியை
பார்த்து நெஞ்சம்நெகிழ ஆசை!
தரிசன வசுலால் வளராத
கோயிலில் சாமிகும்பிட ஆசை!
குறையே கூறப்படாத கடவுலிடம்
கைகட்டி நின்றிட ஆசை!