முதியோர் இல்லமும் பாராளுமன்றமும்
உறவின் வலியில்
உணருகிறது முதியோர் இல்லம்
ஊழலின் வாயில்
நாறுகிறது பாரளுமன்றம்
அன்பின் ஆதரவு
சலுகையின்றி தவிக்கிறார்கள்
முதியோர் இல்ல உறுப்பினர்கள்
ஆட்சியின் அதிகார
சலுகையில் ஜொலிக்கிறார்கள்
பாரளுமன்ற உறுப்பினர்கள்
பணமில்லாமல் மகனின்
பாசத்தை தேடுகிறார்கள்
முதியோர் இல்லவாசிகள்…
பாசமில்லாமல் நாட்டின்
பணத்தை திருடுகிறார்கள்
பாரளுமன்றவாசிகள்…..
உணவுக்கு வழியில்லாமல்
குமறலில் முதியோர் இல்லம் –தேச
உணர்வு இல்லாமல்
கூச்சலில் பாராளுமன்றம்
மகனுக்கு
சுமையாகிப்போன பெற்றோர்கள்
முதியோர் இல்லத்தில்
பரிதாப நிலையில் …… மனிதம்
மக்களுக்கு
இம்சையாகிப்போன சில முதியோர்கள்
பாராளுமன்றத்தில்
ஆபத்தான நிலையில் …………. தேசம்
-----------------இரா.சந்தோஷ் குமார்