சாதி முரண்
![](https://eluthu.com/images/loading.gif)
நீ என்னை சீரழிக்கையில்
உன் உடலில்
நான் பதித்த
என் விரல்
நக நுனிகளின்
இரத்த வரிக்கோடுகள் ,
உன்னில்
ஜாபகப் படுத்தும்
இந்த ஒதுக்கப் பட்டவளின்
ஜென்ம வெறு உமிழ்வை .
நீ தீண்டாது ஒதுக்கிய
ஒரு சமூகத்தின்
பிரதி பலிப்பாய் நான்
உன் வெறிக்கு
இரையான
என் யோனிச் சதை மட்டும்
எப்படி விதிவிலக்கானது
மிருகமே?