@@@ பாட்டுக்கோர் பாரதியின் நினைவுநாள் @@@

@@@ பாட்டுக்கோர் பாரதியின் நினைவுநாள் @@@

பாருக்கொரு பாரதியாய்
===உதித்த பகலவனே
பாமரரும் உணர கவிதைவடித்த
===முண்டாசுக்கவிஞனே
பாடிய பாடல்களை படிக்கையிலே
===உணர்ச்சி பொங்குதே

பரங்கியரை விரட்டிட பாடல்கள்
===முழங்கிட்ட தேசியகவிஞனே
பண்டைய இலக்கிய கவிதையிலும்
===புதுக்கவிதை தந்த புலவனே
பயந்து நடுங்கிய நாட்களில்
===பெண்ணுரிமைக்காய் குரலிட்ட பாலகனே

பாரதமென்று சொல்கையிலே
====பாரதி நீயே
பளிச்சென்று பெருமிதமாய்
====என் மனதில்
பாவை எனக்கும்
====படிக்கையிலே வீரம் தந்தாய்

பண்டைய அடிமை வாழ்வை
===அறுத்தெறிந்தாய்
பாடிடுமே வருங்காலமும்
===பாட்டுகவி பாரதியை
பாடிய பாடலை படித்து
===அடைந்திடுமே நற்கதியை

பாதளம் சென்றோர்
===காலம்காலமாய் பலர்
பாடலால் உள்ளம் கவர்ந்து உணர்வாய்
===வாழ்வோர் உன்போல் சிலர்
பரிசுத்தமாய் என் இதயத்தில்
===பவித்ரமாக வைத்திருக்கிறேன் உன்னை

பாரதியின் நினைவுகள் அழியும்வரை
===பாரதிக்கு ஏது இறப்பு
பாமரனும் படிக்கிறான்
===உன்னை எண்ணி!!!
பாரதம் முழுதும் நிறைந்து
===வாழ்கிறாய் நீ !!!

(தேசியக்கவி முன்டாசுக் கவிஞனின்
நினைவுநாளில் நாமும் நினைத்திடுவோம் நித்தமும் கவிதையால் உள்ளம் கவர்ந்து நாட்டுக்காய் உயிர் ஈந்த மாமனிதனை )

....கவியாழினி...

எழுதியவர் : கவியாழினி (11-Sep-13, 1:37 pm)
பார்வை : 226

மேலே