மழை நீர் சேகரிப்பு
கானம் மறந்த குயில்
ராகம் தேடுகிறது
வண்ணம் மறந்த வில்
வானை தேடுகிறது
சப்தம் மறந்த சிங்கம்
இரையை தேடுகிறது
வானின் நல்வரமாம்
மழையை மனம் தேடுகிறது
வந்த வரத்தை வீணாக்கி
மீண்டும் வானம் பார்க்கிறது மனம்!
நீ எதை சேர்ப்பாயோ தெரியாது
இன்றே மழை நீரை சேகரி!!