பகைவனுக்கும் இரங்கும் பண்பு!
சொந்த நாட்டினராக இருந்தும், தொல்லைகள் கொடுத்த மஜும்தாலைக்கூட சுவாமிஜி ஒருபோதும் வெறுக்கவில்லை. விருப்பு வெறுப்பற்ற மகானாகவே என்றும் திகழ்ந்தார் அவர். அமெரிக்க மக்களைப் புரிய வைப்பதற்காகச் சில கூட்டங்களும் புகழ்மொழிகளும் தேவைப்பட்ட போது அதனைச் செய்யுமாறு மொழிகளும் தேவைப்பட்ட போது அதனைச் செய்யுமாறு இந்தியர்களைத் தூண்டினார். எதிர்பார்த்ததைவிட அதிகமாக இந்தியாவில் நிகழ்ச்சிகள் நடைபெற்றபோது அன்னையின் அருளை எண்ணி நெகிழ்ந்தார். அப்போது தான் ஜூலை மாதம் மஜும்தாரின் ஒரு நூல் வெளிவந்தது. அதைப்பற்றி மேரி ஹேலுக்கு எழுதினார். எனது நண்பர் மஜும்தாரின் நூலை இன்டிடிரியர் பத்திரிகை புகழ்ந்து எழுதியிருந்ததைக் கண்டேன். அவர் பெரியவர், நல்லவர், சொந்த நாட்டு மக்களுக்காக எவ்வளவோ செய்வர்' தம்மை இகழ்ந்து, தமது நடத்தையைப்பற்றி அவதூறு பரப்பிய ஒருவரைப் பாராட்ட எவ்வளவு பரந்த மனம் வேண்டும்!
ஸ்ரீராமகிருஷ்ணரிடமிருந்து அத்தகைய பாடத்தைத் தானே பெற்றிருந்தார் சுவாமிஜி! ஒருமுறை ஸ்ரீராம் கிருஷ்ணர் இளம் நரேனிடம், 'கடவுளில் வாழ்பவர்களைச் சில நேரங்களில் உலகியல் மக்கள் குறைகூறுவார்கள், கேலி பேசுவார்கள். யானை கம்பீரமாக நடந்து செல்லும். பின்னால் தெரு நாய்கள் குரைத்தபடியே ஓடும். யானை அவற்றைச் சிறிதாவது பொருட்படுத்துமா? என் மகனே, ஒருவேளை உன்னைப் பலர் பின்னாலிருந்து அவதூநு பேசுவதாக வைத்துக்கொள். அவர்களை நீ என்ன செய்வாய்?' என்று கேட்டார். அதற்கு நரேன் குரலில் வெறுப்பு தொனிக்க, 'அதேதான், தெரு நாய்கள் என் பின்னால் குரைக்கின்றன என்று நினைத்து ஒதுக்குவேன்' என்றார். ஸ்ரீராமகிருஷ்ணர் சிரித்துவிட்டு, 'அந்த அளவிற்குப் போகாதே! எல்லோரிலும் கடவுள் அல்லவா இருக்கிறார்! அசையும் பொருள், அசையாப் பொருள் அனைத்திற்கும் உரிய மரியாதை கொடுக்க வேண்டும்' என்றார். சுவாமிஜி அதையே செய்தார்.
'என்னைப் புரிந்து கொள்ளாததற்காக பாதிரிகளையோ மற்றவர்களையோ நான் குறை சொல்லமாட்டேடன். ஏனெனில் பெண்ணையோ, பணத்தையோ சிறிதும் பொருட்படத்தாத ஒரு மனிதனை அவர்கள் கண்டதே இல்லையல்லவா? அது சாத்தியம் என்றே முதலில் அவர்கள் நம்பவில்லை. எப்படி நம்புவார்கள்? பிரம்மச்சரியம், தூய்மை இவற்றைப்பற்றி மேலை நாட்டினரின் கருத்துக்கள் இந்தியர்களின் கருத்தைப் போன்றதே என்று எண்ணிவிடக் கூடாது என்று எழுதுகிறார் அவர்.