தடைபடவில்லை எங்களின் மனதில் மட்டும்
எல்லாமும் செய்தாயிற்று.
தடைபடாமல் மன(ண)ம் முடிக்க
சோதிடரின் ஆலோசனையில்
சாதகம் மாற்றியும்
ஊரில் உள்ள அனைத்து
தெய்வங்களின் தரிசனமும் ...!
புண்ணியம் முடித்தாயிற்று.
பூசை புனித தலங்கள்
பரிகாரங்கள்
ஆயிரத்தெட்டு தீபங்கள்
சடங்குகள்
தோஷங்கள்
அன்னதானங்கள்
குளக்கரை ஸ்நானங்கள்...!
சாதகத்தை
சமாளிப்பை
பூசை தோஷ
பரிகாரங்களைத்
தாண்டியும்
தோஷமில்லை
வேஷமில்லை
ஆடம்பரமில்லை
கடவுள் நம்பிக்கையே
தடையில்லை திருமணம்
பரிசுத்தமாய் நிறைவானது
எங்களின் இருமனதில் மட்டும் ....