தீபம் ஏற்றி வைக்க உன் பூவிரல் வேண்டுமடி 555
உயிரே...
என் வீட்டு
முற்றத்தில்...
நான் அகல் விளக்கு
ஏற்றினாலும்...
எடுத்து வைக்க உன்
பூ விரல் வேண்டுமடி...
இன்று மட்டுமல்ல என்
வாழ்வெல்லாம்...
ஐமுக குத்து விளக்கி
ஏற்ற தெரியவில்லை...
உன் கைகள் ஏற்ற
வேண்டும்...
வாசல் வாழ்த்தும்
வாழைமரம் போல...
வாழை தோரணம் உன்னில்
வாழ்க்கை கேட்டேன்...
குலை விட்ட வாழையை
காட்டினாய்...
வேரிலும் மீண்டும்
துளிர் விடும்...
அழகே தெரியாத
உனக்கு...
துளிர்விடும்
வாழையை போல...
நீ என்னை வெறுக்கும்
போதெல்லாம்...
அதிகமாகவே
நேசிக்கிறேனடி...
என் பெயர் சொல்ல
மழலை வேண்டும்...
மழலையை சுமக்கும்
தாயாக நீ வேண்டும்...
என் வாழ்வில்...
அழகே அகல் விளக்கை
ஏற்றி விட்டேன்...
வருவாயா எடுத்து
வைக்க என் வாழ்வில்.....