பகடகாயாய் நான் !....
சொல்லிய சொல்லுக்கும்
சொல்லகூடாத வார்த்தைக்கும்
கேட்ட செவிக்கும்
கேட்க கூடாத வார்த்தைக்கும்
பொறுமையாய் என் செவிகள்
கண்டும் காணாமல்
பேசும் வார்த்தைகள்
என் காதில் விழ
விழும் வார்த்தைகளின்
அர்த்தங்கள் அறிந்து
சற்றேன எழும் கோபத்தை
சாதுருவமாய் ஆராய்ந்து
சாந்தமாய் திகழ
பொறுமையாய் என் மனது
பொறுமையாய் நானிருக்க
என் பொறுமையின்
குணம் அறியாமல்
அதன் அர்த்தம் தெரியாமல்
அன்பாய் விலகி நிற்கும்
என்னை
அறிவுயில்லதவன்
அன்புயில்லதவன்
பெசதேரியாதவன்
வாழத்தெரியாதவன்
பொழைக்கத்தெரியதவன்
என்று
ஏளனம் பல பேசி
இளக்காரமாய் நடத்தி
ஏமாற்று வேலை பல செய்து
பகடகாயாய் நான் இன்று
பொறுமையை நான்
இழந்து
புதுமையாய்
குணம் அறிந்து
அதன் அர்த்தம் புரிந்து
புதிய பாதை கண்டு
சிறந்த அறிவை கொண்டு
சிறப்புடன் சிந்தித்து
அதை செயல்படுத்தி
திறமையை என்றும் வாழ
வாழ வைக்கும் இறைவனிடம்
என்றென்றும் கேட்போம் எழுமையாய் !
என்றும் அன்புடன்