பிரியும் நாள் .

பிரயோசனம் இன்றி
பிரிந்து போகும் நாளை
பிறந்தநாள் என்று
பிரம்மாண்டமான
கேக் வெட்டி
பிரியாவிடை வைக்கிறார்கள்
புண்ணாக்கு
மடமையர்கள் இன்று !

வயது ஒன்று
கூடிவிட்டதால்
வாய்விட்டு
சிரிக்கும் மானிடனே ....

உன் ஆயுளும் குறைந்துவிட்ட
உண்மைதனை நீ அறிந்தால்
தொடருமா
உன் சிரிப்பு ?

பிறந்தநாள்
உன் வாழ்வை
பறித்துச் செல்லும்
நாள் என்பதை
உணரும் வரை

விழிக்கப்போவதில்லை
மனிதம்
உயரப்போவதில்லை
மானுடம்

உணர்ந்து விடு
மானிடா
உயர்ந்துவிடும்
மனிதம் தானா !

எழுதியவர் : பிரகாசக்கவி எம்.பீ அன்வர (25-Sep-13, 2:22 pm)
சேர்த்தது : prahasakkavi anwer
Tanglish : piriyum naal
பார்வை : 104

மேலே