@@மன்னிப்பு@@

உயிரே...
பொய்யாக கூட உன்னிடம்
கோபம் கொள்ள தெரியவில்லை...
என் மனம் அறிந்து
உன்னை துன்பப்படுத்த
ஒரு போதும் எண்ணியதில்லை ....
நாம் வாழும் காலங்கள்
முழுவதும் -உன் மனம்
புரிந்து கொண்டவளாகவே
வாழ ஆசை உனக்கு சொந்தனமான
நிமிடம் முதல்....
அறியாமல் செய்த தவறு
உன் மனதை ஆழமாக
காயப்படுத்துமென ஒரு
நிமிடம் கூட எண்ணவில்லை இவள்...
மன்னிப்பு கேட்டும் என்னை
முழு மனதோடு மனிக்க இடம்
தரவில்லை உன் மனம் ...
நீ பேசிய வார்த்தைகளால்
கங்கை வெள்ளம் தான்
உன்னவளின் விழிகளில்....
பிறர் மனதை நோகடிக்க கூடாது
என் எண்ணுபவள் நான்.
என்னவனின் மனதை
மட்டும் காயப்படுத்த
நினைப்பேனா...
மன்னிக்க கற்றுக்கொள் ..
தவறுகளை மென்மையாக
சுட்டிக்காட்டினாலே நேசிப்பவர்கள்
புரிந்து கொள்வார்கள் ...
வன்மையான வார்த்தைகளால்
நீ இருக்கும் இதயத்தை
காயப்படுத்தாதே....
ஒரு சில நிமிடங்கள்
மரணத்தை நோக்கி பயணிக்கிறது
உன்னவளின் இதயம்...
மன்னிக்க வேண்டுகிறேன் .
உன் இதயத்தை காயப்படுத்தியதற்கு ...
காலம் முழுவதும் உன்
அன்புக்கு மட்டுமே அடைக்கலம்
வேண்டும் உன் வெறுப்புக்கு அல்ல...
குழந்தை செய்யும் தவறை
மனதளவில் மனிப்பவள்
அன்னை மட்டுமே...
ஒரு குழந்தையாய்
உன்னிடம் மனிப்பு கேட்கிறேன்...
மன்னித்து விடு...