உங்களால் உலகம் இனி விழிக்கட்டும்

விடியல் கவிதையாகத் தோன்றும்
விரித்துப் பாருங்கள் சிந்தனைச் சிறகை

வாழ்க்கை இனிமையாகத் தோன்றும்
ரசித்துப் பாருங்கள் மற்றவர் மனதை...

முட்களும் மென்மையாகத் தோன்றும்
முடித்துப் பாருங்கள் மற்றவர் வலியை

அகிலமும் அருமையாகத் தோன்றும்
ஆழ்ந்து பாருங்கள் உங்களின் குணத்தை....!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (30-Sep-13, 11:51 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 53

மேலே