சிக்னல் பிச்சை ...
ஏந்தும் கைகளை ஏக்கங்களோடு திருப்பி அனுப்ப
எப்படி இந்த நாகரிக மனிதர்களுக்கு
தைரியம் வந்ததோ??
ஏந்தும் அந்த கண்களோடு சேர்ந்து
என் கண்களும் கலங்கின...
சொகுசு வண்டியில் இருந்தால்
ஈகை மறந்துவிடுமோ??
இல்லை சன்னல்களை திறக்கும் ஸ்விட்ச்
தொலைந்து விட்டதோ??
இல்லை சன்னல் திறக்கமாட்டேன்
என்று சொல்லிவிட்டதோ??
அந்த சன்னல் திறக்க வேண்டாம்...
கதவுகளும் திறக்க வேண்டாம்...
உம் மன சன்னல்களை மட்டும் திறந்தால் போதும்...
மனம் மறுத்து போன மனித மூடர்களே...
நீங்கள் நன்றாக வாழ்க...